கனமழை: திருக்குறுங்குடி நம்பிகோயில் செல்ல பக்தர்களுக்குத் தடை
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடுகனமழை: திருக்குறுங்குடி நம்பிகோயில் செல்ல பக்தர்களுக்குத் தடை
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
களக்காடு: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நம்பிகோயில் செல்ல பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழைபெய்து வருகிறது. இதனால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாறு ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
மலைப் பகுதியில் பலத்த மழையால் களக்காடு தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி பொங்கிப் பாயும் புதுவெள்ளம்
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, திருக்குறுங்குடி நம்பியாற்றில் தடுப்பணையைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துப் பாய்கிறது. மேலும் திருக்குறுங்குடி மலைப் பகுதியில் உள்ள திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்திலும் தண்ணீர் செல்கிறது.
இதையடுத்து, திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கும், நம்பியாற்றில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதேபோல வெள்ளிக்கிழமை காலை மழை இல்லாததால் தலையணை பச்சையாற்றில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். பிற்பகல் மழை பெய்து தலையணை பச்சையாற்றில் தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் ஆர்ப்பரித்துப் பாய்வதால் தலையணையை சுற்றிப் பார்வையிட மட்டுமே வனத்துறையினர் அனுமதித்தனர்.
தலையணையில் வெள்ளம் குறைந்த பின்னரே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.