தமிழ்நாடு

பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை 

DIN

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிா்ணயம் செய்து அனுமதி வழங்கியது. 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப்போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடு குறித்தும், உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த மாவட்ட நிா்வாகமும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகா் முழுவதும் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனா். குற்றங்களைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்து செல்ல உள்ளனர். 

பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 102 காவல் நிலையங்களிலும் எஸ்.ஐ தலைமையில் 2 காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

பிளஸ் 1 முடிவு: எந்தெந்த பாடத்தில் எத்தனை பேர் சதம்?

தோட்டத்தில் விளையாடச் சென்ற போது விபரீதம் -கிணற்றில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT