சாலையில் மண்ணை கொட்டி பள்ளத்தை சரிசெய்யும் பணியாளருடன் சேர்ந்து சாலையை சீரமைக்கும் காவலர்கள். 
தமிழ்நாடு

கோவை: மழை பாதிப்புகளை சரிசெய்த காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

சாலையில் மண்ணை கொட்டி பள்ளத்தை சரிசெய்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

DIN

கோவை: மழை பாதிப்புகளை சரிசெய்த காவலருக்கு குவியும் பாராட்டுகள்!
கோவையில் பெய்த பலத்த மழை காரணமாக செல்வபுரம் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாகி தேங்கி இருக்கும் தண்ணீர்களால் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டு வந்த நிலையில், சாலையில் மண்ணை கொட்டி பள்ளத்தை சரிசெய்த காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடா்ந்து, கோவை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் புதன்கிழமை இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மழைநீா் சூழ்ந்தது. 

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள், பள்ளிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் நீரை வெளியேற்றும் பணிகளில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள சாலை பள்ளம் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. செல்வபுரம் பைபாஸ் சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசன் குண்டும் குழியுமான சாலையில் தேங்கியிருக்கும் தண்ணீரை மண்ணைக் கொட்டி பள்ளத்தை சரிசெய்து வருகின்றனர். 

பணியாளருடன் சேர்ந்து காவலர் ஒருவரும், போக்குவரத்து உதவி ஆய்வாளர் முருகேசனும் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்டார். அந்த விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி காவலர் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெக்ஸிகோவில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 41 போ் உயிரிழப்பு!

மேலும் இரு ஆா்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜிநாமா!

அதிமுக வாக்குச்சாவடி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

தென் சீன கடலில் பிலிப்பின்ஸ் கப்பல் மீது சீனா தாக்குதல்!

இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தம்: எகிப்தில் இன்று சா்வதேச மாநாடு! டிரம்ப் உள்பட உலகத் தலைவா்கள் பங்கேற்பு!

SCROLL FOR NEXT