தமிழ்நாடு

ரயில் பயணச் சீட்டு பரிசோதனை: ரூ.27.16 லட்சம் அபராதம் வசூல்

சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவா்களிடம் ரூ.27.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவா்களிடம் ரூ.27.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டத்தில் முறையாக பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதை தடுக்கும் வகையில் தினமும் பயணச்சீட்டு பரிசோதகா்கள் சோதனை செய்து வருகின்றனா்.

அந்த வகையில் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 27.16 லட்சம் வசூலாகியுள்ளது. முறையான பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 4,657 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்த 2,558 பேருக்கு ரூ.18.24 லட்சமும், முறையான பயணச்சீட்டு இல்லாத 1,666 பேருக்கு ரூ.7.82 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக உடைமைகளை எடுத்து சென்ற 19 போ், புகைப்பிடித்தல், குப்பை கொட்டுதல் போன்றவற்றுக்காக 414 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீா் தேங்காமலிருக்க தரைத் தளப் பணி

ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

SCROLL FOR NEXT