நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதியில் நடந்த கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம். 
தமிழ்நாடு

நீடாமங்கலம் ஒன்றியத்தில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம் ஒன்றியத்தில் தீபாவளி நாளை கருப்புக்கொடி ஏற்றி கருப்பு தினமாக விவசாய தொழிலாளர்கள்  கடைபிடித்தனர்.

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியத்தில் தீபாவளி நாளை கருப்புக்கொடி ஏற்றி கருப்பு தினமாக விவசாய தொழிலாளர்கள்  கடைபிடித்தனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் 100 நாள் சம்பளம் நிலுவையை கண்துடைப்பாக வழங்கி இருக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், வேலை செய்த அனைத்து நாள்களுக்கும் சம்பளபாக்கியை உடனே வழங்கிட கோரியும், கருப்பு கொடி ஏற்றி நீடாமங்கலம் ஒன்றியத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வாழாச்சேரி கிளையில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பி. காளியப்பன் தலைமையிலும், ஒளிமதி கிராமத்தில்  விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் யு.சுந்தரமூர்த்தி தலைமையிலும் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிக்க: மேட்டூர் அணை நிலவரம்

ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி. கந்தசாமி, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் டி. ஜான்கென்னடி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் பி.பாண்டியன், வாலிபர் சங்கம் ஒன்றிய தலைவர் ராஜகுரு, வாழாச்சேரி கிளை செயலாளர் எ. முருகேசன் மற்றும் பெண்கள்  கலந்து கொண்டனர். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT