தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கடலோர  மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை

DIN

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நவம்பர் 16ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை காரணமாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றும்(நவ.13) நாளையும்(நவ.14) கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு மிகாமல் மழை பெய்யும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT