தமிழ்நாடு

சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசுக் கழிவுகள்: அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்

DIN


சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசு கழிவுகளில் இதுவரை 100 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது: 

தீபாவளியையொட்டி சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை சுமார் 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. 

பட்டாசுக் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும். திங்கள்கிழமை இரவுக்குள் கழிவுகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 200 டன் வரை பட்டாசுக் கழிவுகள் சேகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், இதற்காக மட்டும் 19,600 பணியாளர்கள் பணியில் உள்ளனர். 

மேலும், அகற்றப்பட்ட பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையில் அறிவியல் பூர்வமாக அழிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

காற்றின் தரம் மோசம்
தீபாவளி பட்டாசுகளால் காற்றின் தரம் மோசம் பிரிவுக்கு சென்றது. 

சென்னையில் வேளச்சேரி, மணலி பகுதிகளில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

காற்றின் தரக்குறியீடு மணலியில் 322, வேளச்சேரியில் 308 என பதிவாகி உள்ளது. 

இதேபோன்று அரும்பாக்கம் 256, ஆலந்தூர் 256, ராயபுரம் 232, கும்மிடிப்பூண்டி 241, வேலூர் 230, கடலூர் 213 என பதிவாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT