முகப்பு
தமிழ்நாடு

கனமழை: சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு!

தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:20 AM
பகிர்:

தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னையில் அமைக்கப்பட்டுள்ள அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் மேயர் பிரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கப்படுவதை ஆய்வு மேற்கொண்டார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று (நவ. 14) காலை புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்துக்கு அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை பாதிப்புகளைக் கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கனமழை பாதிப்புகள் மற்றும் நீர்தேங்கும் இடங்கள் குறித்து கணிகாணிக்கப்பட்டு வருகிறது. அங்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இன்று ஆய்வு மேற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கேட்டறிந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →