தமிழ்நாடு

சபரிமலை சீசன்: சென்னை - நெல்லை இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்!

DIN

சபரிமலை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு, பக்தா்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. இதனால் தீபாவளிப் பண்டிகையின்போது பயணிகள் வசதிக்காக ஏற்கெனவே இயக்கப்பட்ட வழக்கமான ‘வந்தே பாரத்’ ரயிலுடன் 5 நாள்கள் சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயிலுக்கும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததால், சபரிமலை சீசனை முன்னிட்டு வாராந்திர ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு வசதியாக வியாழன்தோறும் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து நவ. 16, 23, 30, டிச. 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06067) பகல் 2.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06068) இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ஆகிய இடங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி முதலீட்டு இணையதளம்: ரூ.23 லட்சம் இழந்த பெண்!

பொருளாதார மண்டலத்தில் தமிழகம் முதலிடம்!: டி.பி. வேர்ல்ட்

நீங்களாகவே இருக்க தயங்காதீர்கள்... சுஜிதா

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

SCROLL FOR NEXT