கோப்புப்படம் 
தமிழ்நாடு

தூத்துக்குடி துறைமுகத்தில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை மதியம் ஏற்றப்பட்டது.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை மதியம் ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, புதன்கிழமை மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி விசாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 510 கி.மீ. தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை (நவ.16) ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் ஒடிஸா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, இது குறித்து மீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் தொலைதூர புயல் எச்சரிக்கைக்காக தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை மதியம் ஏற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி நினைவிடத்தில் மோடி மரியாதை!

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

SCROLL FOR NEXT