மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா(102) உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி 

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா(102) உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

DIN


சென்னை: சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா(102) உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சளி மற்றும் காய்ச்சல் காரணமாக ஆக்சிஜன் குறைவு ஏற்பட்டதை திங்கள்கிழமை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை 9.30 மணியளவில் மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த சங்கரய்யா உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, மக்களவை உறுப்பினர் அ.ராசா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

சங்கரய்யா இறுதிச் சடங்கு நாளை அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்: நீதிபதி சந்துரு

தளி தோட்டக்கலை ஆராய்ச்சி, பயிற்சி மையத்தில் பட்டயப் படிப்பு

ராயபுரத்தில் ரூ.12.93 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

சேலத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது பேருந்து மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு: தந்தை படுகாயம்

பரையன்தாங்கல் ஊராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள்

SCROLL FOR NEXT