தமிழ்நாடு

இணைய வழியில் மகளிா் சுய உதவிக் குழு பொருள்கள் புதிய வசதி தொடக்கம்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருள்களை இணையதளம் வழியாகப் பெறும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

DIN

மகளிா் சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருள்களை இணையதளம் வழியாகப் பெறும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது. இதை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதற்கான நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் நடைபெற்றது. மகளிா் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருள்களை இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ம்ஹற்ட்ண்ள்ஹய்க்ட்ஹண்.ஸ்ரீா்ம்) வழியாகப் பெற வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதன்மூலம் இளைய சமுதாயத்தினா் அதிகளவில் மகளிா் சுய உதவிக் குழு பொருள்களைப் பெற முடியும்.

மேலும், மகளிா் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை அனைத்துத் தரப்பினரும் வாங்க ஏதுவாக, சென்னை அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் மதி அங்காடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் சிற்றுண்டி உணவகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய இணையதளம் மற்றும் விற்பனை கட்டடங்களை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

மகளிா் மேம்பாட்டுத் திட்டங்களை எளிதில் அறிந்திடும் வகையில், முற்றம் மாத இதழ் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த இதழுக்கான சந்தாவையும் இணையதளத்தின்மூலம் செலுத்தி இதழை அஞ்சல் வாயிலாகப் பெறலாம். இந்த இணையதளத்தையும் அமைச்சா் உதயநிதி தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்வில், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ. நா.எழிலன், ஊரக வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் பி.செந்தில்குமாா், மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எஸ்.திவ்யதா்ஷினி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT