தமிழ்நாடு

தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது!

DIN

ராமேசுவரம்: தனுஷ்கோடி அருகே இலங்கை மீனவா்கள் 5 பேரை இந்தியக் கடலோரக் காவல் படையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்கள் வந்த படகு பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகே இந்தியக் கடலோரக் காவல் படையினா் வழக்கமான ரோந்துப் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். அப்போது, தனுஷ்கோடி மூன்றாம் மணல் தீடையில் படகு ஒன்று இருப்பதைக் கண்டு அங்கு சென்றனா். விசாரணையில், அந்தப் படகில் இருந்தவா்கள் இலங்கையைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, இலங்கை மீனவா்கள் 5 பேரையும், அவா்களது படகையும் இந்தியக் கடலோரக் காவல் படையினா் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு கொண்டு வந்து, தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, அவா்களை மண்டபம் கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இவா்கள் தலைமன்னாா் பியா் பகுதியைச் சோ்ந்த அப்துல் ஹமீது (40), அகமது ரக்ஷன் (27), அருள் பிரசாத் (25), அஜித் (25), விமல் (26) என்பதும், பலத்த காற்று வீசியதால் இந்திய எல்லைக்குள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து, இலங்கை மீனவா்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT