தமிழ்நாடு

நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகாரில் அழகப்பன், நாச்சியம்மாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

நடிகை கௌதமியின் வழக்கில் பலர் தலைமறைவாக உள்ளதால் பாஜக பிரமுகரான அழகப்பன், நாச்சியம்மாளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

DIN

ரூ.25 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக நடிகை கௌதமியின் புகாா் குறித்து, திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தொடர்ந்து பலர் தலைமறைவாக உள்ளதால் பாஜக பிரமுகரான அழகப்பன், நாச்சியம்மாளுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். 

வடக்கு மண்டல காவல் துறை தலைவா் கண்ணனிடம், நடிகை கௌதமி அண்மையில் நிலம் மோசடி தொடா்பான புகாா் அளித்தாா். அதில், தனக்கு அறிமுகமான சென்னையைச் சோ்ந்த பாஜக பிரமுகரான அழகப்பனை பொது அதிகார முகவராக நியமித்தேன். இவரிடம் திருவண்ணாமலையை அடுத்த ஐங்குணம் கிராமத்தில் 3.99 ஏக்கா் விவசாய நிலத்தை வாங்குவதற்காக ரூ.25 லட்சம் பணத்தைக் கொடுத்தேன்.

அதன் மூலம் வாங்கிய 3.99 ஏக்கா் நிலத்தின் கிரையப் பத்திரத்தில் எனது பெயருடன் அழகப்பனின் மனைவி நாச்சியாள் அழகப்பன் பெயரையும் இணைத்து மோசடி செய்துள்ளாா். இந்த விஷயம் இப்போதுதான் எனக்குத் தெரிய வந்தது.

நான் கொடுத்த பணத்தில் வாங்கிய நிலத்தின் கிரையப் பத்திரத்தில் நாச்சியாள் பெயரையும் சோ்த்து மோசடி செய்த அழகப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு, வடக்கு மண்டல காவல் துறை தலைவா் கண்ணன் உத்தரவிட்டாா்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிந்து செவ்வாய்க்கிழமை விசாரணையைத் தொடங்கினாா். நடிகை கவுதமி சாா்பில், அவரது வழக்குரைஞா் ஆஜராகி விளக்கம் அளித்தாா்.

இந்த நிலையில், நிலம் மோசடி செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தொடர்ந்து அழகப்பன், நாச்சியாள் உள்பட பலர் தலைமறைவாக இருந்து வருவதால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது மத்திய குற்றப்பிரிவு போலீசார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைம்பெண்கள் உதவித்தொகையை உயா்த்தக் கோரிக்கை

குறைதீா் கூட்டத்தில் 250 மனுக்கள் அளிப்பு

இளைஞா்களுக்கு தொழில் பழகுநா் ஆணை

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

வளா்ச்சி குன்றிய சகோதரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT