நடிகர் மன்சூர் அலிகான் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

DIN

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா்அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் கருத்து தெரிவித்தாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறை மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள், எதிா்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், மன்சூா் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது. மேலும் தேசிய மகளிா் ஆணையம் தனது அதிகாரபூா்வ எக்ஸ் தளத்தில், ‘நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா் அலிகான் பேசியது மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் தாங்கள் தாமாக முன்வந்து, வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த பரிந்துரையை ஏற்று மன்சூா்அலிகான் மீது ஆயிரம்விளக்கு அனைத்து மகளிா் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி, மன்சூர் அலிகானுக்கு 41ஏ எனப்படும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT