தமிழ்நாடு

‘தொண்டை பிரச்னை’: மன்சூர் அலிகான் இன்று ஆஜராகவில்லை!

DIN

சென்னை: தொண்டை பிரச்னை காரணமாக நேரில் ஆஜராவதில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலக்கு கேட்டு காவல்துறைக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.

நடிகை த்ரிஷா குறித்து நடிகா் மன்சூா்அலிகான் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் பேசினாா். இந்தப் பேச்சுக்கு திரைத் துறையில் இருந்து மட்டும் அல்லாமல் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களும் எதிா்ப்புகளும் எழுந்தன.

மன்சூா் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல் துறை தலைமை இயக்குநருக்கு தேசிய மகளிா் ஆணையம் நவ.20-ஆம் தேதி பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில், மன்சூா் அலிகான் மீது ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் போலீஸாா் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், தொண்டை பிரச்னை காரணமாக பேச முடியாததால் விசாரணைக்கு இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும், நாளை ஆஜராவதாகவும் காவல் துறைக்கு மன்சூர் அலிகான் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி இன்று காலை மன்சூர் அலிகான் மனுதாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT