கோப்புப்படம் 
தமிழ்நாடு

ரூ.5-ல் பயணம்: அதிரடி சலுகையை அறிவித்த சென்னை மெட்ரோ!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) தனது நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு ஒரு நாள் சலுகையை அறிவித்துள்ளது.

DIN

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு ஒரு நாள் சலுகையை அறிவித்துள்ளது.

வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒற்றை பயண இ-க்யூஆர் பயனச் சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு, ரூ.5  என்ற பயணக் கட்டண சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிங்கார சென்னை அட்டை, மெட்ரோ பயண அட்டை, சிஎம்ஆர்எல் மொபைல் ஆப் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச் சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒற்றை பயண இ-க்யூஆர் பயணச் சீட்டு சிறப்பு சலுகை மூலம், பயணிகள் விலை குறைவான பயண அனுபவத்தை அனுபவிக்க முடியும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெலிவரி ஊழியர்களின் நலன் கருதி! 10 நிமிட சேவையை ரத்து செய்யும் பிளிங்கிட்

கூட்டணி தொடர்பாக டிடிவி தினகரனுக்கு எந்த குழப்பமும் அழுத்தமும் இல்லை: அமமுக

அனைவருக்கும் சமமான கல்வி வேண்டும்; தனியார்மயம் கூடாது : ராகுல் காந்தி

சூர்யா எனக்குத் துணையாக நிற்கிறார்: ஞானவேல் ராஜா

தலைக்கவசம் அணிந்தவர்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

SCROLL FOR NEXT