முகப்பு
தமிழ்நாடு

பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்ட ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு 

பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:25 AM
கோப்புப்படம்
பகிர்:

கணவா் சிறையில் உள்ள நிலையில் பிள்ளைகளின் படிப்புக்காக பணம் திரட்டுவது சிரமமாக உள்ளதால், பணம் திரட்டுவதற்கு ஏதுவாக கணவரை விடுப்பில் அனுப்ப வேண்டுமென கோரியிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தா் மற்றும் சுந்தா் மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.நதியாவும், சிறை நிா்வாகம் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் இ.ராஜ்திலக்கும் ஆஜராகி வாதிட்டனா்.

இதையடுத்து செந்தில்குமாருக்கு 28 நாள்கள் சாதாரண விடுப்பு வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனா். கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை காலை நேரத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →