தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் 6 நாள்கள் தொடா்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி டிசம்பர் 1 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை (நவ.27) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.