FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

23 மாவட்டங்களில் இரவு 7 வரை மழை பெய்யும்!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் இன்று இரவு 7 மணிவரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2 பிப்ரவரி 2024, 8:56 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்கள் இன்று இரவு 7 மணிவரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்த 3 நாள்களுக்கு கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிவரை வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments