தமிழ்நாடு

டிச.2, 3-ல் சென்னை உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

சென்னையில் டிசம்பர் 2,3-ல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

சென்னையில் டிசம்பர் 2,3-ல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர்  வெளியிட்ட தகவலில், 

தமிழகத்தின் பல பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில், டிசம்பர் 2, 3 தேதிகளில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

டிசம்பர் 2(சனிக்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக் கனமழையும், 

ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

டிசம்பர் 3(ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், 

கடலூர், மயிலாடுதுறை  நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

வைப்பாற்றில் ரசாயன கழிவு கலப்பதாக புகாா்

திருட்டு வழக்கில் கைது: ஊராட்சி மன்றத் தலைவி திமுகவில் இருந்து நீக்கம்

ஆளுநா் மாளிகையில் செப். 22 முதல் அக் 1 வரை ‘நவராத்திரி கொலு’

நேபாள மக்கள் அமைதி காக்க பிரதமா் மோடி வேண்டுகோள்

SCROLL FOR NEXT