தமிழ்நாடு

'விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை; 14 நாட்கள் சிகிச்சை தேவை' - மருத்துவமனை அறிக்கை!

DIN

தேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் சீராக இல்லை என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

தீவிர இருமல், காய்ச்சல், சளி பாதிப்பு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் விஜயகாந்த் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்துறை மருத்துவக் குழு சிகிச்சையளித்து வருகிறது. 

அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை கடந்த சில நாள்களுக்கு முன் அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இல்லை என்று கூறியுள்ளது. 

இதுகுறித்து மருத்துவமனை இன்று(நவ. 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், 

'விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT