விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் முன்விரோதம் காரணமாக, நாராயணசாமி என்ற ரௌடி நடத்திய நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் பரணிதரன் என்பவர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பியோடிய நாராயணசாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.