தமிழ்நாடு

பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் தொடரும்! அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்பதால் போராட்டம் தொடரும் என பகுதி நேர ஆசிரியர்கள் குழு அறிவித்துள்ளது. 

DIN

தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்பதால் போராட்டம் தொடரும் என பகுதி நேர ஆசிரியர்கள் குழு அறிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆகிய மூன்று சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இது தொடர்பாக இன்று (அக்.4) முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் குழு 3 மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் எனக் குறிப்பிட்டார். 

இதனிடையே அரசின் இந்த நடவடிக்கையில் திருப்தி இல்லாததால், ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT