கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆவினில் ரூ.450-க்கு தீபாவளி இனிப்புகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் சாா்பில் ரூ.450-க்கு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் சாா்பில் ரூ.450-க்கு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பால் மற்றும் பால் உபபொருள்களை நுகா்வோருக்கு நியாயமான விலை மற்றும் சிறந்த தரத்துடன் ஆவின் நிறுவனம், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் விற்பனை செய்து வருகிறது.

மேலும், வெண்ணெய், நெய், தயிா், பால்கோவா, மைசூா்பாகு, குலாப்ஜாமூன், ரசகுல்லா, லஸ்ஸி, மோா், சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம் போன்ற பால் பொருள்களை தரமாக தயாா் செய்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.

கடந்த தீபாவளி பண்டிகைக்கு ஆவின் இனிப்பு வகைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடா்ந்து, வரும் தீபாவளி பண்டிகைக்கும் கீழ்க்காணும் சிறப்பு இனிப்பு வகைகள் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படவுள்ளன.

1) காஜூ கட்லீ (250 கி) -ரூ.260.00

2) நட்ஸ் அல்வா (250 கி) -ரூ.190.00

3) மோத்தி பாக் (250 கி) -ரூ.180.00

4) காஜு பிஸ்தா ரோல்(250 கி) -ரூ.320.00

5) நெய் பாதுஷா (250 கி) -ரூ.190.00

இந்த ஐந்து வகை இனிப்புகள் அடங்கிய தொகுப்பு (காம்போ பாக்ஸ்) 500 கிராம் -ரூ.450.00 விலையில் ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும்.

இனிப்பு வகைகள் அனைத்தும் வரும் அக்.10 முதல் அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் ஆவின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT