தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து குறைந்தது!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் நீர் வரத்து குறந்தது.

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் நீர் வரத்து குறந்தது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் மழை பெய்ததால் முல்லைப் பெரியாறு அணையில் நீர் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மழை பெய்து நின்றது. அதனால் அணைக்கு  நீர் வரத்தும் குறைந்தது. 

நீர் திறப்பு அதிகரிப்பு
அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வந்ததால் வியாழக்கிழமை அணையிலிருந்து தமிழக பகுதிக்கு வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது, வெள்ளிக்கிழமை 1,167 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மின் உற்பத்தி
தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வியாழக்கிழமை 1,200 கன அடி வெளியேற்றப்பட்டதால் 108 மெகாவாட் மின்சாரமும் வெள்ளிக்கிழமை 1167 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் 105 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது.

அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 121.55 அடியாகவும் (மொத்த உயரம் 152அடி), நீர் இருப்பு 2,934 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர்வரத்து விநாடிக்கு 740 கன அடியாகவும், தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1167 கன அடியாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT