தங்கம் விலை இன்று உயர்ந்தது! எவ்வளவு?
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த 10 நாள்களுக்கும் மேலாக படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த செப். 23 ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் 5,521 ஆக இருந்த நிலையில் நேற்று (செப். 6) ரூ. 5,285 ஆகக் குறைந்தது.
இதையடுத்து இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 42,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 20 உயர்ந்து ரூ. 5,305-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 74.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 74,500 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.