பட்டாசு கடையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம்-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு கடையில் பிடித்த தீ, மளமளவென அருகிலுள்ள மற்ற பட்டாசு கடைகளுக்கும் பரவியது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் இந்த விபத்தில் 10 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. கடையில் இருந்த ரூ.1.50 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் வெடித்து சிதறியதில் லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்தன. தேசிய நெடுஞ்சாலையில் 2 மணிநேரமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
லாரியின் வந்த பட்டாசுகளை இறக்கும்போது மின்கம்பி உரசி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு கடையில் 25க்கும் மேடற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.