வரும் 14ஆம் தேதி வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, இம்மாதம் ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, இம்மாதம் ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட உள்ளது.
தமிழக அரசின் திட்டங்களிலேயே அதிக நிதி கொண்ட மிகப்பெரிய திட்டமாகக் கருதப்படும் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆடவா் கல்லூரி மைதானத்தில் செப். 15ஆம் தேதி நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார். மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை கடந்த சில நாள்களாக நடைபெற்றன. அவற்றில் தகுதியான விண்ணப்பதாரா்களாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிா் தோ்வு செய்யப்பட்டனா். மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்தவா்களில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணங்களைத் தெரிவித்து விண்ணப்பதாரா்களுக்கு கைப்பேசி வழியாக குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத்தொகையை, இனி மாதந்தோறும் 15 ஆம் தேதி ரூ.1000 வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. வங்கிகளில் 1ம் தேதி சம்பளம் உள்ளிட்ட பரிவர்த்தனை நடப்பதால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படாவண்ணம் 15ல் வரவு வைக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளர்களுக்கு, இம்மாதம் ஒருநாள் முன்னதாகவே வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட உள்ளது.
அக்.15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 14ஆம் தேதியே வங்கிகளில் பணத்தை செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.