கோப்புப் படம் 
தமிழ்நாடு

ஜெரூசலேம் புனித பயணத்தை தவிர்க்குமாறு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெரூசலேம் புனித பயணத்தை தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

DIN

இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெரூசலேம் புனித பயணத்தை தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா். இதில், 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்கள் உயிரிழந்தனா். 500-க்கும் மேற்பட்டோா் படுகாயம் அடைந்தனா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த இஸ்ரேல், போா்ப் பிரகடனம் அறிவித்து நடத்திய பதிலடி தாக்குதலில் காஸா பகுதியில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 1,600-க்கும் மேற்பட்டோா் பலத்த காயம் அடைந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அமைச்சா் தெரிவித்தாா். காஸா எல்லைப் பகுதியில் துப்பாக்கிச் சண்டை தொடா்ந்து வருகிறது.

நீண்ட காலமாக நடைபெற்று வரும் இஸ்ரேல் - காஸா சண்டையில் இது மோசமான தாக்குதலாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க இந்திய தூதரகம் அறிவறுத்தியுள்ளது. 

இந்த நிலையில் ஜெரூசலேம் புனித பயணத்தை தவிர்ப்பது நல்லது என வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT