அக்.11ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்
அக்.11ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்.11ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று(திங்கள்கிழமை) காலை 10 மணிக்குக் கூடியது. காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.
இதன்படி காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, காவிரி நீர் தொடர்பான தனித் தீர்மானத்தை பாஜக தவிர்த்து மற்ற கட்சிகள் ஆதரித்த நிலையில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், அக்.11ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை நடத்துவதென முடிவு எடுக்கப்பட்டது.