கோப்புப்படம் 
தமிழ்நாடு

மேட்டூா் அணையிலிருந்து 500 கன அடி நீா் திறப்பு!

மேட்டூா் அணையிலிருந்து நீா் திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

DIN

மேட்டூர் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. 

ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28ஆம் தேதி வரை குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 220 நாட்களுக்கு 330 டிஎம்சிதண்ணீர் தேவைப்படும்.

பாசன பகுதிகளில் மழை பெய்தால் பாசன தேவை குறையும். நடப்பு ஆண்டில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் காவிரியை நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தாலும், கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவிக்க மறுப்பதாலும்  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது.

தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், மேட்டூர் அணையில் நீர்மட்டமும் நீர் இருப்பும் வேகமாக குறைந்து வந்தது.

மேட்டூர் அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் தேவைகளுக்கும் அணையில் குறைந்தபட்சம் 9.6 டிஎம்சி தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் தொடர்ந்து பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதல் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 30.90அடியாகவும், நீர் இருப்பு 7.88அடியாகவும் குறைந்தது. 

அணைக்கு வினாடிக்கு 163 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் இருப்பு குறைந்தபட்ச அளவுக்கு கீழே சென்றதால் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 2,000 கன அடியிலிருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர் மின் நிலையம் வழியாக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் அணையின் நீர் மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 7 கதவணைகளில் 460 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

ஜூன் 12ந் தேதி முதல் இன்று காலை வரை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 93.40 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மழை பெய்து மேட்டூர் அணையின்  நீர்வரத்து அதிகரித்தால் மட்டுமே பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை விடுவித்தால் மட்டுமே சம்பா சாகுபடி தமிழகத்தில் துவக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

SCROLL FOR NEXT