தமிழ்நாடு

மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு உரிமைத்தொகை: முதல்வர்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோரில் தகுதியானோருக்கு ரூ.1000 தரப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோரில் தகுதியானோருக்கு ரூ.1,000 தரப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. நிகழாண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று நடைபெறுகிறது. 

இந்த நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்குவோம் எனக் கூறிய வாக்குறுதி என்ன ஆனது என அதிமுக உறுப்பினர் உதயகுமார் கேள்வி எழுப்பினார். 

அதிமுக கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், நிதி நிலைமை மோசமாக இருப்பதால் தாமதமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது. 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். உரிமைத்தொகை திட்டத்தில் குறைகள் இருப்பின் ஆதாரங்களுடன் கூறலாம் என அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொதுக்கூட்டம் !

என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்

மதுரையிலிருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை சிறப்பு ரயில்

ஜிஎஸ்டி விகித மாற்றத்தால் பொருளாதாரம் வேகம் எடுக்குமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!

SCROLL FOR NEXT