தமிழ்நாடு

27 மீனவர்கள், 5 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பு!

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மண்டபம் மீனவர்கள் 27 பேருடன் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

DIN

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மண்டபம் மீனவர்கள் 27 பேருடன் 5 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதியில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நள்ளிரவு கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடிக்கும் போது 6  ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரத்தை சேர்ந்த கென்னடி, பாஸ்கர், சர்புதீன், ரீடன் ஆகியோரின் நான்கு படகுகள் அதில் இருந்த குணசேகரன், ராமநாதன், பாலு, கண்ணன், ஜஸ்டீன், மோபின், அருள்தாஸ், சேவியர், கிளின்டன், மீதுன் உள்ளிட்ட  22 மீனவர்களை சிறைபிடித்தனர். 

இதே போன்று மண்டபத்தை சேர்ந்த மரிய வாசிங்டன் என்பவது ஒரு படகு அதில் இருந்த 5 மீனவர்களை சிறைபிடித்தனர். தலைமன்னார் மற்றும் காங்கேசம் துறைமுகத்திற்கு அழைத்து சென்று, படகை பறிமுதல் செய்து மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

ஒரு நாளில் 27 மீனவர்களுடன் 5 விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

EPS- உடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம் - TTV Dhinakaran

ஹாலிவுட் தொடரில் நடிக்கும் சித்தார்த்!

கிர்க் கொலைக்காகக் கொண்டாட்டமா? வெளியேறத் தயாராக இருங்கள்! வெளிநாட்டினருக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

SCROLL FOR NEXT