கனமழை: விடுமுறை குறித்து கல்வி நிறுவனமே முடிவெடுக்கலாம்
சிவகங்கையில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடுகனமழை: விடுமுறை குறித்து கல்வி நிறுவனமே முடிவெடுக்கலாம்
சிவகங்கையில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கையில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிவகங்கையில் கனமழை காரணமாக விடுமுறை குறித்து கல்வி நிறுவனங்களே முடிவெடுக்கலாம் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.