தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுடன் இஸ்ரோ தலைவர் சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

DIN

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் திங்கள்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

ராமேசுவரத்தில் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் சர்வ தேச அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட அப்துல்கலாமின் 92-வது பிறந்த நாள் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் நேற்று கலந்து கொண்டார்.

தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் சோம்நாத் கூறுகையில், சந்திரயான் திட்டத்தில் பங்களித்த தமிழக விஞ்ஞானிகளை கெளரவப்படுத்தியதற்காக முதல்வர் ஸ்டாலினிடம் நன்றி தெரிவித்ததாக கூறினார்.

முன்னதாக, செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் வீட்டுக்குச் சென்று அவரை பாராட்டி நினைவுப் பரிசை சோம்நாத் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT