தமிழ்நாடு

அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை 2 மடங்காக உயர்த்தி: முதல்வர் அரசாணை

அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை அரசு வழக்குரைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

DIN


சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரண்டு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணை அரசு வழக்குரைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. 

இந்நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திட அரசு வழக்குரைஞர்கள் பலர் நியமிக்கப்பட்டு, சுமார் 700-க்கும் மேற்பட்ட அரசு
வழக்குரைஞர்கள் அரசு சார்பாக வழக்கினை நடத்தி வருகின்றனர்.

இந்நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதம் 1995-ஆம் ஆண்டிற்குப் பிறகு மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது. 2006-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பதவியேற்றதும், அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை மாற்றி அமைத்திட 2007-ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்து, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2011-ஆம் ஆண்டு கட்டண விகிதம் கணிசமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. 2011-ஆம் ஆண்டிற்குப்பின், 10 வருட காலம் கட்டண விகிதம் ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை.

அரசு வழக்குரைஞர்களின் பங்களிப்பு மற்றும் பணிப்பளுவினை கருத்திற்கொண்டு இவர்களது கட்டண விகிதத்தை மாற்றி அமைப்பது அவசியம் எனக் கருதி அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா அளித்த பரிந்துரை கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமை
வழக்குரைஞர் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தார்.

இதனை அரசு பரிசீலித்து, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பரிந்துரையின் அடிப்படையில், அரசு வழக்குரைகளின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

இந்த அரசாணையை திங்கள்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில், விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் டி.எஸ். சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்குரைஞர் தேவராஜன், இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர உரிமையியல் அரசு வழக்குரைஞர் ஷாஜகான் ஆகியோரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இதனால் உயர்நீதிமன்றம் தவிர்த்த அனைத்து நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை நடத்தும் அனைத்து அரசு வழக்குரைஞர்களும் பயன் பெறுவார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT