தமிழ்நாடு

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். 

DIN

தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று(செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி, ஆவடி, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் ஐஏஎஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். 

சென்னை மாநகராட்சியின் (வடக்கு) துணை ஆணையராக இருந்த சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ், கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம். 

பொள்ளாட்சி சார் ஆட்சியர் பிரியங்கா ஐஏஎஸ், திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக மாற்றம். 

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக மாற்றம். 

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி ஈரோடு மாநகராட்சி ஆணையராக நியமனம். 

ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்ப்பக ராஜ், உயர்கல்வித் துறையின் துணை செயலாளராக மாற்றம். 

சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆவடி ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார், 

அதுபோல மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரவீன் குமார், சென்னை மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையராக நியமனம்.

கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் மதுபாலன், மதுரை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா ஐஏஎஸ், கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,100 உதவித்தொகை!

சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்ற வெஸ்லி: ஜிசிடி இறுதிப் போட்டிக்குத் தேர்வான பிரக்ஞானந்தா!

பொறியியல் கலந்தாய்வு: கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறை! 81% மாணவ சேர்க்கை!

ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கு: குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்

ராஜாசாப் புதிய வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT