தமிழ்நாடு

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை மருத்துவமனையில் சாமி புகைப்படம் பயன்படுத்தக் கூடாதா? - மருத்துவமனை டீன் விளக்கம் 

அக்டோபா் 23, 24 ஆகிய தேதியில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், எந்தவொரு மதத்தைச் சார்ந்த சாமி புகைப்படம், சிலை வடிவில் பயன்படுத்தக் கூடாது

DIN


திரூப்பூர்: ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் சாமி புகைப்படம், சிலைகள் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட வில்லை என மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார். 

அக்டோபா் 23, 24 ஆகிய தேதியில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், எந்தவொரு மதத்தைச் சார்ந்த சாமி புகைப்படம், சிலை வடிவில் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனை வார்டு பிரிவுகளில் ஏதேனும் சாமி புகைப்படம், சிலைகள் இருப்பின் எதிர்கால பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு உடனடியாக அகற்றி விட இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது என சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் எந்த விதமான சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை. தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயுத பூஜையை முன்னிட்டு மதம் சார்ந்த சாமி புகைப்படமோ, சிலையோ வைக்கக் கூடாது என கல்லூரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியதாக சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது. அதுபோன்ற சுற்றறிக்கை எதுவும் அனுப்பப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT