தமிழ்நாடு

உண்மையான சனாதன தர்மத்தை உலகிற்கு உணர்த்தி, வாழ்ந்துகாட்டியவர் பங்காரு அடிகளாா்: விஜயகாந்த் இரங்கல்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனா் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

DIN


சென்னை: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனா் பங்காரு அடிகளாரின் மறைவுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

விஜயகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஆன்மீகம் மட்டுமின்றி கல்வி, மருத்துவம், சமூக சேவைகள் செய்து தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில மக்களின் அன்பை பெற்றவர் பங்காரு அடிகளார். 

நானும் எனது மனைவி பிரேமலதா  விஜயகாந்தும் பலமுறை மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி கோயிலுக்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுள்ளோம்.

அனைவராலும் அன்போடு அம்மா என்று அழைக்கப்பட்ட பங்காரு அடிகளார் மறைவு, ஆன்மீக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். சனாதன தர்மத்தை உலகிற்கு உணர்த்தி, வாழ்ந்துகாட்டியவர். 

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்கள் மற்றும் பக்தர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

TVK Vijay full speech - முதல்வருக்கு சில கேள்விகள்! | TVK | Vijay

இதையெல்லாம் நம்பாதீங்க... ராஜாசாப் படக்குழு அறிக்கை!

SCROLL FOR NEXT