கோப்புப்படம் 
தமிழ்நாடு

கோவை விமானநிலையத்தில் ரூ.1.57 கோடி மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

விமானம் மூலம் ஷாா்ஜாவில் இருந்து வெள்ளிக்கிழமை கோவைக்கு கடத்தி வரப்பட்டரூ.1.57 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், இது தொடா்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா

DIN

கோவை: விமானம் மூலம் ஷாா்ஜாவில் இருந்து வெள்ளிக்கிழமை கோவைக்கு கடத்தி வரப்பட்டரூ.1.57 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், இது தொடா்பாக பெண் உள்பட 2 பேரை கைது செய்தனா்.

ஷாா்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனையிட்டனர். 

அப்போது, திருவாரூர் பகுதியை சேர்ந்த தீபா(28) மற்றும் கடலூரை சேர்ந்த மணிகண்டன்(28) ஆகிய இரண்டு பயணிகள் உள்ளாடை மற்றும் வயிற்று பகுதிக்குள் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து அவர்களிடமிருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.1.57 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

SCROLL FOR NEXT