தமிழ்நாடு

பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி கைது 

சென்னை பனையூரில் பாஜக கொடிக்கம்பம் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். 

DIN

சென்னை பனையூரில் பாஜக கொடிக்கம்பம் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பனையூரில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இல்லத்தின் வெளியே 100 அடி உயரம் கொண்ட பாஜக கொடிக் கம்பம் நடப்பட்டிருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து முன்அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை காவல்துறையினர் நேற்று அகற்றினர். 
அப்போது பாஜக-காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தின்போது ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை கற்களை வீசி பாஜகவினர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக கொடிக்கம்பம் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
கொடிக்கம்பத்தை அகற்றிய ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை கற்களை வீசி சேதப்படுத்திய வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT