கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவு
கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.
கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.
மதுரை புதுநத்தம் சாலையில் கடந்த ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினால் 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து வைக்கப்பட்டது.7 தளங்களுடன் 3.5 லட்சத்துக்கு அதிகமாக புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறந்து இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.
இதனிடையே நூலகத்திற்கு இதுவரை 2 லட்சத்து 41,314 வாசகர்கள், மக்கள், மாணவர்கள் வருகை தந்து பயனடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் கலைஞர் நூலகத்தை நோக்கி வருவதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.