கோப்புப்படம் 
தமிழ்நாடு

கௌதமி விலகல் மனவேதனை அளிக்கிறது: பாஜக தேசிய மகளிரணி தலைவி!

பாஜக-வுக்காக கடுமையாக உழைத்த நடிகை கௌதமி கட்சியில் இருந்து விலகிய செய்தி மனவேதனை அளிக்கிறது என அக்கட்சி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

DIN

பாஜக தேசிய மகளிரணி தலைவியும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் இன்று (அக்டோபர் 23) கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகுவது குறித்து கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்து வானதி சீனிவாசன் பேசியதாவது: “பாஜகவில் தீவிரமாக உழைக்கக்கூடிய பெண்மணி கௌதமி. அவர் எந்தளவுக்கு கட்சிக்காக கடுமையாக உழைத்தார் என்பது எனக்குத் தெரியும். தான் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதால் தனக்கு முன்னுரிமை தரவேண்டும் என அவர் யோசித்ததே இல்லை. 

அந்தளவுக்கு கட்சியின் அடிப்படைத் தொண்டர் போல பணியாற்றக் கூடியவர். அவர் எதற்கும் சோர்ந்து போகக்கூடியவர் அல்ல. தேசிய மகளிரணியில் இணைந்து பணியாற்றுமாறு நானே அவரிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் மாநில அரசியலில் பணியாற்றுவதாக கூறிவிட்டார்.

அதன்பின் அவருடனான எனது சந்திப்புகள் குறைந்துபோனது. கடந்த 10 நாட்களுக்கு முன்பாக ஒரு வழக்கு தொடர்பாக அவரது உதவியாளர் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இந்நிலையில் திடீரென கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவரின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

 அவர் பாஜகவில் இருந்து மிகுந்த மனவேதனையுடன் விலகுவதாக அறிவித்துள்ள கடிதத்தைப் பார்க்கும்போது எனக்கு கடுமையான மனவேதனை ஏற்படுகிறது. கட்சியை விட்டு வெளியே வந்தால்தான் புகார் பதிவு செய்வேன் என நெருக்கடி கொடுத்தார்களோ என சந்தேகம் எழுகிறது.” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி பல்கலை.யின் 67 கல்லூரிகளுக்கு மீண்டும் யு-ஸ்பெஷல் பேருந்துகள் சேவை: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

இளைஞா் கத்தியால் குத்தி கொலை: 4 போ் கைது

மடிக்கணினி திட்டத்துக்கான ஒப்பந்தம் விரைவில் முழுமை பெறும்: அமைச்சா் கோவி. செழியன்

தமிழகத்தில்தான் உயா்கல்வி பயிலும் மாணவா்கள் அதிகம்: பேரவை துணைத் தலைவா் பெருமிதம்

தோ்தல் ஆணையத்துக்கு எதிராக செப்.6-இல் போராட்டம்! வாக்குரிமை காப்பு இயக்கம் அறிவிப்பு

SCROLL FOR NEXT