கோப்புப் படம். 
தமிழ்நாடு

தொடர் விடுமுறை: சிறப்பு பேருந்துகள் மூலம் 3 நாட்களில் 4.80 லட்சம் பேர் பயணம்

தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

DIN

தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகள் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்படுகின்றன. முன்னதாக, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடா்ந்து 4 நாள்கள் விடுமுறை விடப்பட்டதால், பெரும்பாலானோா் தங்கள் சொந்த ஊா்களுக்கு புறப்பட்டுச் சென்றனா்.

பயணிகளின் வசதிக்காக சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னையிலிருந்து, கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி நெடுஞ்சாலை பேருந்து நிறுத்தங்கள் மூலம் தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 2,265 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில், அக். 20, 21 ஆகிய தேதிகளில் இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகளில் 3 லட்சத்து 92 போ் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று இரவு 12 மணிவரை சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 8,003 பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய தடகளப் போட்டியில் சாம்பியன்: செந்தில் பப்ளிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT