தமிழ்நாடு

தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை நிராகரிக்கும் ஆளுநர்! வைகோ கண்டனம்

DIN

டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கக்கோரி தமிழ்நாடு அரசு செய்த பரிந்துரையை நிராகரித்த ஆளுநர் ரவிக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்(டி.என்.பி.எஸ்.சி.,) தலைவராக நேர்மையாளரான முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.
சைலேந்திர பாபுக்கு அந்தத் தகுதி இல்லை என்று தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி நிராகரித்திருப்பது அவரது அதிகார எல்லையை மீறிய தான்தோன்றித்தனமான சர்வதிகார முடிவாகும்.
தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் இல்லையென்றால் அதிக ரன்கள் குவிக்க முடியாதா? முன்னாள் ஆஸி. கேப்டன் பதில்!

மும்பை விபத்து: விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்!

கலால் வழக்கு: கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு!

டாப் 4-க்குள் நுழையுமா லக்னௌ?

தொடரும் சோகம்.. நாய் கடித்ததில் 5 மாதக் குழந்தை பலி

SCROLL FOR NEXT