முகப்பு
தமிழ்நாடு

இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:12 AM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று இன்று காலை வடமேற்கு மற்றும் அதனையொட்டிய வங்கக்கடல் பகுதியில் மிக தீவிர புயலாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேசத்தின் கெபுபரா மற்றும் சிட்டகாங் இடையே நாளை மாலை கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் மற்றும் புதுவை நாளை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →