தமிழ்நாடு

ராஜராஜனின் 1038 ஆவது சதய விழா: 48 வகையான பேரபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூா் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழாவையொட்டி தேவாரம் திருமுறை பாடி பெருவுடையாருக்கு 48 வகையான பேரபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தஞ்சை ஆண்ட மாமன்னன் ராசராச சோழனின் பிறந்த தினமான ஐப்பசி மாதம் சதய தினத்தன்று ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு இவ்விழா அரசு விழாவாக தமிழ்நாடு முதல்வரின் வழிகாட்டுதலில் சிறப்பாக நடைபெறுகிறது. 

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இரண்டு நாட்கள் நாட்டியம், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம், திருவீதி உலா என வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.  

திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி தமிழ் முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருமுறை வீதி உலா தஞ்சை மாநகர 4 ராஜவிதியில்  நடைபெற்று, தஞ்சை பெரிய கோயில் வளாகத்திற்குள் திருவீதி உலா வந்து அடைத்தது. 

பின்னர் ராசராச சோழன் உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பெருவுடையார், பெரியநாயகிக்கு திருமுறை தேவாரப் பாடல்கள் பாடி பால், மஞ்சள், சந்தனம், திருநீறு, தேன், அரிசிமாவு, திரவிய பொடி, நெய், தயிர், பன்னீர், எழுமிச்சை பழச்சாறு, பஞ்சாமிர்தம், வில்வம் உள்ளிட்ட 48 வகையான திரவியங்களால் பேராபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் நிறைவு: இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரோடு மாட்டுச் சந்தை

14 ஊராட்சிகளில் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை: ஆட்சியா்

கோபியில் தேசிய டெங்கு தின விழிப்புணா்வு

காற்று, மழையால் 120 ஹெக்டோ் வாழை மரங்கள் சேதம்

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT