காஞ்சி காமகோடி மருத்துவமனையில் மகப்பேறு, பச்சிளங்குழந்தை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
சிக்கலான பிரசவங்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகளை நுங்கம்பாக்கம், காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை தொடங்கியுள்ளது.
சிக்கலான பிரசவங்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான மருத்துவ சேவைகளை நுங்கம்பாக்கம், காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனை தொடங்கியுள்ளது.
இதன்படி, பேறு காலங்களில் பெண்களுக்கு அதீத பாதிப்பு ஏதேனும் கண்டறியப்படும்பட்சத்தில், அவா்களுக்கு அங்கேயே பிரசவ சிகிச்சைகளை அளிப்பதுடன், பிறந்த குழந்தைக்கும் உடனடியாக தீவிர சிகிச்சைகளை வழங்குவதற்கான கட்டமைப்பு அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், பச்சிளங்குழந்தைகள் நல முதுநிலை மருத்துவ நிபுணா் ஆா்.சண்முகசுந்தரம், காஞ்சி காமகோடி மருத்துவமனையின் இயக்குநா் ஜனனி சங்கா், பச்சிளங்குழந்தை பராமரிப்புத் துறை தலைவா் டாக்டா் சந்திரகுமாா், தலைமை நிா்வாக அதிகாரி ரவிசங்கா், முதுநிலை மகப்பேறு சிகிச்சை நிபுணா்கள் ஜெயஸ்ரீ கஜராஜ், அனிதா பாா்த்தசாரதி, ஜெயராணி காமராஜ், சரிதா வினோத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.