முகப்பு
தமிழ்நாடு

7 மாவட்டங்களில் டாஸ்மாக் பாா் ஒப்பந்தப்புள்ளி முடிவுகளை வெளியிடக் கூடாது: உயா்நீதிமன்றம்

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் டாஸ்மாக் பாா் ஒப்பந்தப்புள்ளி முடிவுகளை அறிவிக்கக் கூடாது என டாஸ்மாக் நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் டாஸ்மாக் பாா் ஒப்பந்தப்புள்ளி முடிவுகளை அறிவிக்கக் கூடாது என டாஸ்மாக் நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளையொட்டி அமைந்துள்ள பாா்களில் காலி பாட்டில்களை சேகரிக்கவும் தின்பண்டங்கள் விற்கவும் உரிமம் வழங்குவதற்காக டாஸ்மாக் நிா்வாகம் அக்.6-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி கோரியது. நிகழாண்டு நவம்பா் 1 முதல் 2025 அக்டோபா் வரையிலான இந்த ஒப்பந்தப்புள்ளியில் பாா்கள் அமைந்திருக்கும் நிலங்களின் உரிமையாளா்களிடம் இருந்து தடையில்லா சான்று, வாடகை ஒப்பந்தம் பெற்று சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்ட 7 நாள்களுக்குள் தடையில்லா சான்று வழங்காவிட்டால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, அடுத்து அதிக தொகைக்கு உரிமம் கோரியவரிடம் நில உரிமையாளா்களின் தடையில்லா சான்று கேட்கப்படும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து குறிப்பிட்டவா்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்கும் வகையில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, திருவள்ளூா் கிழக்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, ஈரோடு ஆகிய 7 வருவாய் மாவட்டங்களைச் சோ்ந்த விண்ணப்பதாரா்கள், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடா்ந்தனா்.

அந்த மனுவில், நில உரிமையாளா்களின் விவரங்களை வழங்காமல் தடையில்லா சான்றும் வாடகை ஒப்பந்தமும் சமா்ப்பிக்கக் கூறப்பட்டுள்ளது பாரபட்சமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்.27-ஆம் தேதி ஒப்பந்தப்புள்ளி திறக்கப்பட உள்ளதால், அதற்கு தடை விதிக்க வேண்டும். ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா்கள் டெண்டரில் கலந்துகொள்ள அனுமதிக்கலாம், இந்த வழக்குகளில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை ஒப்பந்தப்புள்ளி முடிவுகள் அறிவிப்பதை தள்ளி வைக்கலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை மனுதாரா்கள் தரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, மனுதாரா்கள் ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க அனுமதித்த நீதிபதி, ஒப்பந்தப்புள்ளி முடிவுகளை அறிவிக்கக் கூடாது எனவும், அதைத் தள்ளிவைக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிா்வாகத்துக்கு உத்தரவிட்டு, வழக்குகளின் விசாரணையை அக். 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →